பெல்சியம் நாட்டில் மேதகு படம் திரையிடப்பட்டது. 16.08.2021 அன்று பெல்சியம் நாட்டில் தமிழீழத் தேசியத் தலைவரின் போராட்டத் தொடக்க வரலாற்றை வெளிக்கொணரும் மேதகு படம் காண்பிக்கப்பட்டது. பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் ஆர்வமுடன் ஒன்றிணைந்து பார்வையிட்டதோடு தமது உணர்வினையும் வெளிப்படுத்தியிருந்தனர். தேசியச் செயற்பாட்டாளர்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஏனைய மக்களும் இணைந்து மேதகு படத்தினை பார்த்ததோடு படம் சார்ந்து தமது மகிழ்ச்சியினையும் உணர்வினையும் வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது.

