முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்கால் தமிழின அழிப்பு நாள்

2009 மே 18 அன்று சிங்கள இனவெறி அரசினால் திட்டமிட்ட முறையில் தமிழினத்திற்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களினாலும் ,பல் குழல் எறிகணை வீச்சுக்களினாலும், விமானத்தாக்குதல்களினாலும் நடாத்தப்பட்ட கொடூரமான இன அழிப்பிற்கான சர்வதேச நீதி விசாரனை வேண்டியும், திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளை நினைவு கூறும் நினைவேந்தல் நிகழ்வும் பெல்சியத்தில் அன்வேற்பன் மானிலத்தில் ஒபேரா பிளைன்ட் என்னும் இடத்தில் இடம்பெற்றது.

மே 18 பி.பகல் 1.00 மணிக்கு இன அழிப்பை சித்தரிக்கும் பதாதைகள் பல்லின மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டு ,துண்டுப்பிரசுரங்களும் ,குடிநீர் போத்தல்களில் இன அழிப்பு சார்ந்த வாசகங்கள் ஒட்டப்பட்டு இளையோர்களினால் மக்களிற்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கவனயீர்ப்புப்போராட்டமும், நினைவேந்தலும் இடம் பெற்று நிறைவாக முள்ளிவாய்கால் கஞ்சியும் மக்களிற்கு வழங்கப்பட்டு நிறைவு பெற்றது.