மே 18 தமிழின அழிப்பு

மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தலும் ,
புகைப்படக் கண்காட்சியும் ,மற்றும்
மனிதநேய ஈருருளி பயணமும்.
தமிழின அழிப்பில் நிர்க்கதியாக்கப்பட்ட
எம் இனத்தின் விடுதலை வேண்டி நடாத்தப்படும்
கவனயீரப்புப் போராட்டத்திலும் 2009ஆம் ஆண்டு
இன அழிப்பின் போது வீரகாவியமாகிய மாவீரர்களுக்கும் ,
சிங்களப் பேரினவாத அரசினால் கொன்றொழிக்கப்பட்ட
எம்மின மக்களுக்குமான 13ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில்
ஒன்றுகூடி எமது விடுதலைக்கான நீதி கேட்டு குரல் கொடுக்க
அணி திரளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம் .

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ,
பெல்சியம் .