தேசத்தின்குரல்’அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு19/12/2022 ஆம் நாள் பெல்சியம் அன்வெர்ப்பன் மாநகரில் “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வெளிச்சியுடன் நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டதின் அரசியல் ஆசானாகத் தமிழீழத் தேசியத்தலைவருக்கு பெரும் பலமாகத் திகழ்ந்தார் . 14/12/2006 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார். “தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் இன்னும் நிரப்பமுடியாத இடமாகக் காணப்படுகிறது. தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் ஆழமாக நேசித்த ஒரு விடுதலை வீரனாக அன்ரன் பாலசிங்கம் திகழ்ந்தார்.
