தமிழர் திருநாள் 2023 பொங்கல் விழா

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் கடந்த 15/01/2023 ஞாயிற்றுக்கிழமை பெல்சியம் அன்வேர்பன் மாநிலத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகவும் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இன் நிகழ்வானது பகல், 02 மணியளவில் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தாயக பாடல்,பக்திப்பாடல்கள்,நடனங்கள், நாடகம்,கிராமியநடனங்கள், குறியீட்டுநாடகம்,குழுநடனம்,பரதநாட்டியம், கவியரங்கம்உழவர் பயன்பற்றியவை,கவிதை, அறிவாடல்(பொது அறிவு) போட்டி,தற்காப்புகலை இடம்பெற்றன. இன் விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் தமிழ் கலை அறிவுக்கூட மாணவர்கள்,மகளீர் அமைப்பு,இளளையோர் அமைப்பு, இவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் இணைந்து சிறந்த முறையில் ஒழுங்கமைத்திருந்தனர்.மகிழ்சி பொங்கும் தமிழர் திருநாள் இரவு 08 மணியளவில் இனிதாக நிறைவு பெற்றது.