அனைத்துலகப் பொதுத்தேர்வு – 2024 பெல்சியம்.
புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ்ச் சந்ததியினருக்கு தாய்மொழிக்கல்வியை வழங்கும் நோக்குடன் பல்வேறு நாடுகளில் பல கல்வி வளாகங்கள் உருவாக்கப்பட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் பெல்சியம் நாட்டில் வாழ்ந்து வரும் எம் தமிழ்ச் சந்ததியினருக்கு தாய்மொழிக்கல்வியைத் ‘தமிழ்க் கலை அறிவுக்கூடம்’ என்ற அமைப்பின் ஊடாக நாம் வழங்கி வருகின்றோம் .
ஒவ்வொரு வருடமும் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினருடன் இணைந்து அரையாண்டுத் தேர்வு, பொதுத் தேர்வுகளை நடத்தி வருகின்றோம்.
வழமை போன்று இந்த வருடத்துக்கான பொதுத் தேர்வானது இரு தேர்வு நிலையங்களில் மதியம் சரியாக 13:00 மணிக்கு ஆரம்பமாகி
16:00 மணிக்கு நிறைவுற்றது. இத் தேர்வானது ஆசிரியர்களின் கண்காணிப்புடன் முறையாக மேற்கொள்ளப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

