2009ஆம் ஆண்டு முல்லைமாவட்டத்தில் உள்ள ஆனந்தபுரம் பகுதியில் உலக வல்லரசுகளின் துணைகொண்டு தென்னிலங்கையில் உள்ள அனைத்து ஒட்டுமொத்த சிறீலங்கா இராணுவ பலத்தோடு முற்றுகையை நடாத்தியது.
தமிழனின் வீரத்தை உலகமே வியந்துபார்த்த இந்த முற்றுகைச்சமரில் களமாடி வீர காவியமான தளபதிகளான பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் மணிவண்ணன் பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா .ஆகிய தளபதிகளுடன் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவேந்தல் ஆனது 13.04.2025அன்று பெல்சியத்தில் அன்ற்வேற்பன் என்னும் இடத்தில் உணர்பு பூர்வமாக நினைவு கூறப்பட்டது.
