நாள் 7: சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 8ம்…

இன்று (22/02/2022) கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும் பயணித்தவாறு பெல்சியத்தின் தலைநகரம் Brussel  மாநகரத்தின் ஊடாக   Wavre மாநகரத்தில் இருந்து தொடர்ந்தது.

சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை பெல்சிய வெளி நாட்டு அமைச்சிடம் மாநகரசபைகள் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனு ஒப்படைக்கப்பட்டு நம்பிக்கை வாக்குறுதிகளும்  பெறப்பட்டன.  அதே வேளையில் பெல்சிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது கோரிக்கைகளை வலுப்பெற குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.