பெரியகுளம் உறவுகளுக்கு உதவிய பெல்சியம் வாழ் தமிழ் உறவுகள்

தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசபிரிவிற்குட்பட்ட பெரியகுளம் கிராமப் பகுதிகளில் வசித்த 344 அங்கத்துவர்களைக் கொண்ட 108 குடும்பங்கள் கிளி/பெரியகுளம் ஐயனார் வித்தியாலயத்தில் 3 நாட்களுக்கு மேலாக இடம்பெயர்ந்திருந்தவர்களுக்கு 21.12.2023 நேற்று பெல்சியம் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.