தேசத்தின்குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வானது , பெல்சியம் அன்வெப்பனில் நினைவுகூரப்பட்டது. தமிழ் மக்களின் விடிவிற்காக உலக நாடுகளில் எமது விடுதலையை வென்றெடுப்பதற்காக மதிநுட்பத்தைடன் அரசியல் மூலம் போராடியவர். அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணா. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இடைவெளிநிரப்பமுடியாத பேரிழப்பு. இந்நினைவு நிகழ்வில் எழுச்சிக்கவிதைகள் , மற்றும் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டு , தாரக மந்திரத்துடன் நிறைவு செய்யப்பட்டது.


