மனித உரிமைகள் ஆணையகத்தின் 57வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பெல்சியத்தில் (03/09/2024) இன்று நாமன் (namen) என்னும் இடத்தில் ஆரம்பித்த ஈருருளிப்பயணமானது பஸ்ரனோகோ (bastogne) என்னும் இடத்தை மாலை 18:30 மணியளவில் சென்றடைந்துள்ளது. நாளை காலை 9மணியளவில் இதே இடத்தில் ஆரம்பித்து தெடர்ந்தும் ஈருருளிப்பயணப் போராட்டம் நடைபெறும்.
