ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் கவன ஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக நெதர்லாந்துக் கிளையினால் ஆரம்பிக்கப்பட்ட இம் மனித நேய ஈருருளிப்பயணமானது 30.8.2024 வெள்ளி அன்று நெதர்லாந்தின் டென்ஹாக் மாநகரத்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஆரம்பிக்கப்பட்டது. மூன்றாவது நாளாக நேற்று 01.09.2024 இந்த ஈருருளிப் பயணமானது தமிழின உணர்வாளர்கள் உற்சாகத்துடனும் உறுதியுடனும் பயணிக்க பிரைடாமாநகரசபையிலிருந்து ஊடறுத்து பெல்சியம் எல்லையில் சென்றடைந்த இத்தொடர் போராட்டமானது பெல்சியம் கிளையிடம் கையளிக்கப்பட்டது
“நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரியது”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
