

தமிழின ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசிய பொழுது அதை எதிர்த்து தமிழின புரட்சிக்கு வித்திட்ட மாவீரர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 46வது ஆண்டு நினைவில் Antwerpen மாநிலத்தில் மிகவும் உணர்வெளுச்சியுடன் வணக்கம் செலுத்தியுள்ளனர் பெல்சியம் தமிழ் இளையோர் அமைப்பினர்.
மாலை 15:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த இவ்வணக்க நிகழ்வு மாணவர் எழுச்சி பற்றிய பேச்சு, கவிதைகள் மற்றும் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.


