21.05.2022 அன்று தென் தமிழீழம் திருகோணமலை மாவட்டம் வரோதயநகர் கிராமத்தில் மிகவும் வறுமையில் வாழும் 20 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டு வித நாற்றுகள், ஏழு வகையான பயிர் விதைகள் ,மரவள்ளி தடிகள் வழங்கப்பட்டன். இந்த ஊக்குவிப்பு. உதவித்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு பெல்சியம் வாழ் தமிழ் மக்களால் வழங்கப்பட்டது. இந்த உதவிகளைச் செய்த பெல்சியம் வாழ் தமிழ் மக்களுக்கு திருகோணமலை மாவட்ட வரோதநகர் கிராம மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.










