பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலையில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு

தென் தமிழீழம் :-

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக பெல்சியம் வாழ் தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலை மாவட்டம் நித்தியபுரி,ஆனந்தபுரி ஆகிய கிராமங்களில் வாழும் மக்களில் 20 குடும்பங்களுக்கு 28.05.2022 அன்று பயிர்விதைகள் மற்றும் நாற்றுக்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது இவ் உதவியை வழங்கிய பெல்சியம் வாழ்தமிழ் உறவுகள் அனைவருக்கும் திருகோணமலை மக்கள் தமது  நன்றிகளை தெரிவித்துள்ளனர்.