தமிழின அழிப்பிற்கு நீதியும் தமிழ் மக்களுக்கான விடுதலையும் வேண்டி “உரிமைக்காக எழு தமிழா” முரசம் முழங்கி மாபெரும் எழுச்சி நிகழ்வு , பெல்சியம் நாட்டின் தலைநகரில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற முன்றலில் பெருமளவான மக்கள் ஒன்று கூடி மாபெரும் போராட்டம் நடாத்தப்பட்டது. இதில் பெல்சியம் வாழ் தமிழ் மக்கள் பெருமளவாக கலந்து கொண்டதோடு மற்றும் பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, நோர்வே, டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, சுவிஸ், பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் எமது தமிழ் உறவுகள் ஒன்றிணைந்து கடும் மழையையும் பல இடையூறுகளையும் எதிர்கொண்டு உணர்வெழுச்சியுடன் கோசங்களை எழுப்பி தமிழ் இனத்திற்காக மாபெரும் எழுச்சிப் பேரணி நடாத்தப்பட்டது
