பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு வீரவேங்கைகளின் நினைவெழுச்சி நாள் – 2023 பெல்சியம்.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆறு வீரவேங்கைகளின் 16ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் – 2023 பெல்சியம். பெல்சியம் நாட்டில் அன்வேப்பன் மாகாணத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ஆறு மாவீரர்களினதும் 16ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுகளைத் தாங்கிய கவிதைகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெற்றது. தாயக எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன. இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு, எமது தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.