பெல்சியத்தில் நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழா 2026 .

பெல்சியத்தில்  நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழா 2026 

​​பெல்சியத் தமிழர் விளையாட்டுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “தமிழர் விளையாட்டு விழா 2026” எதிர்வரும் 2026 ஒகஸ்ட் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பெல்ஜியத்தின் அன்ட்வெர்பன் நகரில் அமைந்துள்ள Sportcentrum De Rode Loop, Merksem மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தமிழர் பண்பாடு, ஒற்றுமை மற்றும் விளையாட்டு உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்வில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வு விபரங்கள்:

நிகழ்வு: தமிழர் விளையாட்டு விழா 2026

திகதி: 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10.00 மணி

இடம்: Sportcentrum De Rode Loop, Merksem

முகவரி: Rodeloopstraat 2, 2170 Antwerpen, Belgium