தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தளபதி கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களினது நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது. தமிழீழத் தேசியத்தலைவரின் உற்ற நிழலாக திகழ்ந்து தமிழர்களின் பூர்வீக நிலமான தமிழீழ விடுதலைக்காக அயராது சுழன்றார் தளபதி கேணல் கிட்டு அவர்கள். சர்வதேச பணிக்காக புலம்பெயர் தேசத்திற்கு தலைவர் அவர்களால் அனுப்பப்பட்டு ஓய்வின்றி உழைத்து தமிழீழ மண்ணையும் மக்களையும் தேசியத்தலைவரையும் காணும் பேரவாவில் தாயகம் திரும்பும் வேளை நய வஞ்சகத் தனமாக இந்திய படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது 16.01.1993 அன்று தம்மைத் தீக்கிரையாக்கிகொண்டு லெப். கேணல் குட்டிசிறி, மேஜர் மலரவன், கப்டன் ஜீவா, கப்டன் குணசீலன், கப்டன் நாயகன், கப்டன் றொசான், லெப். அமுதன், லெப். நல்லவன், லெப். தூயவன் ஆகியோரும் வீரச்சாவினை தழுவிக்கொண்டனர். பெரும் நெஞ்சுரத்தினை கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அற்பணிப்பின் எடுத்துக்காட்டே என்றுமே அழியாத இந்த தியாகம். அவ்வீர மறவர்களை பெல்சியம் வாழ் மக்கள் எழுச்சிபூர்வமாக 16/01/2022 அன்று நினைவு கூர்ந்தார்கள். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.