நாள் 15: சிறிலங்கா பேரினவாத அரசினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி 15ம்…

இன்று (02/03/2022) பிரான்சு நாட்டில் தொடர்ந்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் முலூசு, சான்லூயி மாநகரசபைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டது. நடைபெற்ற சந்திப்புக்களில் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே நிரந்தர தீர்வு எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கு பிரான்சு வெளிநாட்டு அமைச்சிடம் தாம் அழுத்தம் தெரிவிப்பதாக உறுதி தரப்பட்டு அதற்கான முன்னெடுப்புக்களும் செய்யப்பட்டவை குறிப்பிடத்தக்கது.