தமிழீழ விடுதலைப்போரில் கடந்த 2009ம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்போது அனைத்துலகத் தொடர்பகத்தின் மாவீரர் பணிமனையால் உறுதிப்படுத்தப்பட்ட 15 மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு 12/09/2021 அன்று அனைத்துலக ரீதியாக சமநேரத்தில் பெரும் எழுச்சியாக பெல்சியத்திலும் நடைபெற்றது. சிங்களப் பேரினவாத அரசு தமிழர்களை அடக்கி இன ஒடுக்குமுறைகளால் அடிபணிய வைக்கலாம் என எண்ணிக்கொண்டு பலவிதங்களில் தமிழின அழிப்பினை பன்னெடுங்காலமாக புரிந்து வருகின்றார்கள். இருப்பினும் தம்முயிர் போக்கியேனும் தமிழீழ மக்களை காக்கும் நோக்கிலும் வரலாற்று பாரம்பரிய நிலமான தமிழீழத் தேசத்தின் விடுதலை ஒன்றே எம் மக்களை சுதந்திரமாக வாழவைக்க நிரந்த தீர்வு என்னும் அடிப்படையில் தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமயில் எம் மாவீரர்கள் களாமாடி வீரச்சாவினை தழுவிக்கொண்டார்கள். சொல்லில் அடங்காத அற்பணிப்புக்களை நிகழ்த்தி போரியல் ரீதியாகவும் கல்வி மற்றும் சமூகவியல் அடிப்படை கட்டுமானத்தினூடகவும் எம் இனத்தின் விடுதலைக்காகவே அயராது உழைத்தவர்கள் மாவீரர்கள். தமிழீழ மக்கள் நின்மதிப் பெருமூச்சு விட்டது தமிழீழ விடுதலைப் புலி வீரர்களின் பாதுகாப்பிலும் எமது தேசியத்தலைவர் அவர்களின் நிழலிலும்தான். அதன் அடிப்படையில் தமிழர்களின் மனோ திடத்தினை சிதைக்கவும் தமிழினத்தை அடியோடு அழிக்கவும் என சிங்களப் பேரினவாத அரசு கொத்துக்குண்டுகள் , இரசாயனக் குண்டுகள் , போர்க்களத்தின் பாவனைக்கு தடை செய்யப்பட்ட குண்டுகள் என கண்மூடித்தனமாக தமிழ் மக்கள் மீது இனவழிப்பினை மேற்கொண்ட போதும் இறுதி வரை களமாடி பல வீர மறவர்கள் வீரச்சாவினை தழுவிக்கொண்டார்கள். வீரவேங்கை அஜந்தி, வீரவேங்கை அறிவு, வீரவேங்கை இதயன், வீரவேங்கை பிரியவதனா, வீரவேங்கை புலியரசன், வீரவேங்கை புதியவன், வீரவேங்கை தீப்பொறி, வீரவேங்கை அன்பரசன் லோரன்ஸ், வீரவேங்கை கவியரசி அமலா, வீரவேங்கை முகிலன், வீரவேங்கை நிறையிசை, வீரவேங்கை கரிகாலன், வீரவேங்கை சுதாகரி, வீரவேங்கை இசைவாணன், வீரவேங்கை பல்லவன் ஆகியோருக்கான வீரவணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. “ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.” – தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.ல






