தமிழர்களுக்கு தீர்வு சுதந்திரத் தமிழீழமே என முரசமிட்ட பெல்சியத் தமிழர்கள்.

சிங்களப் பேரினவாத சிறிலங்கா அரசு தான் மேற்கொண்ட தமிழினப் படுகொலையில் இருந்து தப்பிக்கும் வண்ணம் 13ம் திருத்தச்சட்டத்தினை தமிழினத் துரோகிகள் மூலம் அமூல்ப் படுத்தும் சூழ்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தமிழர்கள் ஆகிய எமக்கு எவ்வித சமரசமும் இன்றி ஒரே தீர்வாக தமிழீழமே அமையும் எனவும் இறந்து போன 13ம் திருத்தச்சட்டத்தினை முற்றாக நிராகரிக்கின்றோம் என திட்டவட்டமாக அனைத்துலக ரீதியில் முழங்கி வருகின்றனர்.

அந்தவகையிலே சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தராது எனவும் 13ம் திருத்தச்சட்டத்தினை முற்றாக நிராகரிப்பதோடு, இதற்கு உயிரூட்டும் துரோகிகளையும் அடையாளம் காண்பதோடு , சிறிலங்காப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் நிரந்தர தீர்வு தமிழீழமே என பெல்சியத்தின் Antwerp வாழ் மக்கள் திடசங்கற்பம் பூண்டனர்.