இன்று 03/03/2022, 16ம் நாளாக பாசல் மாநகரத்தில் இருந்து சொலொத்தூண் மாநகரத்தினை வந்தடைந்தது. சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் எனவும் தமிழீழமே தீர்வு என்பதனை வலியுறுத்த வேண்டும் எனும் கோரிக்கைகள் அடங்கிய மனு மாநகரசபையில் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரும் வழியில் தமிழீழ உறவுகள் தேனீர், உணவுகள் போன்றவற்றை அன்போடு பகிர்ந்து அறவழிப்போராட்டத்திற்கான ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.