கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்
எமது தேசவிடுதலைப்போராட்ட பாதையின் தடைநீக்கிகளாகவும் ,தேசவிடுதலை ஒன்றே எமது இலக்கு என்று தரை ,வான்,கடல் .என்று கரும்புலிகளாக தம்மை ஆகுதியாக்கிக்கொண்டவர்களின் நினைவெழுச்சி நாள் பெல்சியத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது . தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பெல்சியக்கிளையினால் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ,தேசியக்கொடி ஏற்றப்பட்டது . தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல்,மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மக்கள் அனைவராலும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பாடல்களும் ,கவிதையும், பேச்சும் இடம்பெற்றன.பின்னர் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடல் இசைக்கப்பட்டு ,இறுதியாக தேசியக்கொடி கையேந்தல் நிகழ்வு நடைபெற்று எமது தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.