தமிழர் விளையாட்டு விழா 2024

நாளைய எமது இளைய தலைமுறையினர் ஆரோக்கியமுள்ள ஒற்றுமையான இனபாகுபாடற்ற குமுகாயமாக திகழ்வதற்கு விளையாட்டு போட்டிகள் இன்றைய காலத்தில் அவசியமான ஒன்றாகும்.

அந்த அடிப்படையில் 01.07.2024 அன்று பெல்சியத்தில் அன்வேற்ப்பன் என்னும் இடத்தில் சிறப்பான முறையில் தமிழர் விளையாட்டுப்போட்டியானது நடைபெற்றது. முதன்மை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இப்போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர் .
குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான கிளித்தட்டும் அதனுடன் தடகள ஆட்டமும் நடைபெற்றது. நிறைவாக வெற்றியீட்டியவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு தமிழீழத்தேசியக்கொடி கையேந்தலுடன் நிறைவு பெற்றது.