கரும்புலிகள் எமது தேசவிடுதலையின் தடை நீக்கிகளாகவும் ,காற்று புகாத இடங்களில் எல்லாம் புகுந்து எதிரியை நிலைகுலைய வைத்த உன்னத மறவர்கள். 05/07/1987 அன்று கரும்புலி கப்டன் மில்லர் அவர்கள் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் மீது தற்கொடை தாக்குதலை நடாத்தி புதிய கரும்புலிகள் அத்தியாயத்தை தொடக்கி வைத்தார்.
அதன் பின்னாளில் தரைகரும்புலிகளாகவும், கடற்கரும்புலிகளாகவும் வான் கரும்புலிகளாகவும், மறைமுக கரும்புலிகளாகவும் எமது மக்களிற்காக விடுதலையை நெஞ்சில் சுமந்து தீராத தாயகமண் பற்றோடு உயர் தியாகம் செய்தவர்கள் .
இந்த உன்னத மறவர்களின் நினைவு நாளானது 08.07.2024 அன்று பெல்சிய நாட்டில் அன்வேற்ப்பன்என்னும் இடத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு கல்லறையில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.
