தமிழின அழிப்பு நாள் மே -18

இலங்கை அரசினால் 2009 மே மாதம் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் 18.05.2023 இன்று பெல்சியம் அன்ற்வெப்பனில் பகல் 13.30 மணியளவில்…

புத்தக வெளியீட்டு விழா இன்று மே 14/05/2023

புத்தக வெளியீட்டு விழா இன்று மே 14/05/2023 ஞாயிறு அன்று பெல்சியம் கிளையின் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வு…

பெல்சியத்தில் தமிழின அழிப்புக்கு நீதிகோரி மாபெரும் பேரணியும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்

12.06.2023 திங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னால் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுதலையடையும் வரை ‘‘உரிமைக்காக எழுதமிழா!’’

தொழிலாளர் தினம்(மே தினம்) நேற்றையதினம் 01/05/2023 திங்கள் அன்று 10மணிக்கு பேரணி ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு தமது நாட்டுக்கொடிகளுடனும் கோசங்களுடனும் பேரணியில் கலந்து கொண்டார்கள். இப்பேரணியானது மதியம் இரண்டு மணியளவில் நிறைவு பெற்றது. சுமார்500க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கவை.

தியாக சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு எழிச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும் ____^_____ நேற்றைய தினம் 23/04/2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு மதியம் 3 மணியளவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.முதன்மை நிகழ்வாக பொதுச்சுடரினை திருமதி அமலதாஸ் சிலோசனா அவர்கள் ஏற்றி வைத்தார் .தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படத்துக்கு உறவினர்கள் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.அகவணக்கத்துடன் கலை நிகழ்வுகள் ஆரம்பமானது .நினைவு சிறப்புரை கவிதைகள்,நடனம்,பேச்சு,தாயகப்பாடல் இடம் பெற்று தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன

தியாகச்சுடர் அன்னை பூபதியின் நினை சுமந்த சுண்டாட்ட சுற்றுப்போட்டி

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வும் நாட்டுப்பற்றாளர் நாளும்

அனைத்துலக மகளீர் தினம் இன்று 08/03/2023 பி.ப. 05.30 மணியளவில் opera plein antwerpen என்னும் இடத்தில் இருந்து பேரணி ஆரம்பமானது. இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு பெண்களுக்கான உரிமை கோரும் கொட்டொழிகளை எழுப்பி தத்தமது நாட்டு கொடிகள், பதாகைகள் ஏந்திய வண்ணம் பேரணியை தொடர்ந்தார்கள். சுமார் இரவு 7.00 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்று பெல்சிய எல்லையை வந்தடைந்து

17.02.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமான மனிதநேய ஈருருளிப்பயணமானது நெதர்லாண்ட் ஊடாக 19.02.2023 இன்று பெல்சிய எல்லையை வந்தடைந்து. அங்கிருந்து பெல்சிய…